திங்கள், 16 நவம்பர், 2026

பாதையும் கற்பனையும் - செயற்கை நுண்ணறிவு

முன்னொரு நாள் மத்தியானத்துச் சென்னை வெயிலில் சென்ட்ரலிலிருந்து பூந்தமல்லி சாலையில் ஈருருளியில் சென்று கொண்டிருந்தபோது பேசிக்கொண்டோம் "இன்னும் சில நாட்களில் ஒரு கண்ணாடி போன்ற கருவியை மாட்டிக் கொண்டு செயற்கை நுண்ணறிவின் தயவுடன் சாலையின் இருமருங்கிலும் மரங்கள் அடர்ந்த பாதையில் பயணிக்கவும் நிழலின் தன்மையை அனுபவிக்கவும் நாம் பழக்கப்படுத்தப்படலாம்" என உரக்கச் சிரித்துவிட்டு "போகிற போக்கில் இந்த சாலை ஒத்தையடிப் பாதையில் எப்படி இருந்திருக்கும் அதில் பயணம் செய்ய விருப்பமா என்று அது கேள்வி கேட்டு நமது ஆர்வத்தைத் தூண்டலாம். நாமும் மாட்டு வண்டிக்கு இணையாக பயணம் செய்ய நேரலாம்" என்று கற்பனையை நீட்டினோம். 

இன்று செய்தித்தாளை புரட்டினால் வாசனையை தகவலாக மாற்றி அனுப்பி மறுபக்கம் அதனை மோப்பம் செய்யும் நிலைக்கு நகர்ந்து வந்திருக்கிறோம் என்று அறிய நேர்ந்தது. அதையொட்டி இன்னும் எண்ணம் நீள்கிறது, மேலும் உறுதிப்படுத்தப்படாத உண்மையாக நம்முன் நின்று புன்முறுவல் செய்கிறது கற்பனை.

கருத்துகள் இல்லை: